சர்வதேச விமான பயணங்களுக்கு அனுமதி வழங்குவது குறித்து அவுஸ்ரேலியா பேச்சு
In அவுஸ்ரேலியா November 10, 2020 12:24 pm GMT 0 Comments 1676 by : Jeyachandran Vithushan

சர்வதேச விமான பயணங்களுக்கு அனுமதி வழங்குவது குறித்து கண்டறியப்படவுள்ளதாக அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிஸன் தெரிவித்துள்ளார்.
ஆசிய பிராந்தியத்தில் கொரோனா அச்சுறுத்தல் குறைவடைந்துள்ள ஒருசில நாடுகளுக்கு அவுஸ்ரேலியாவுக்குள் பிரவேசிப்பதற்கு அனுமதி வழங்குவது குறித்து தற்போது பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன.
கடந்த மாதத்தில் நியூசிலாந்து இனத்தவர்களுக்கு அவுஸ்ரேலியாவின் கன்பரா மாநிலத்துக்குள் நுழைவதற்கு அனுமதி கிடைத்தது.
எவ்வாறாயினும் தொடர்ந்தும் அவுஸ்ரேலியாவின் ஒருசில மாநிலங்களின் எல்லைகள் அந்நாட்டு பிரஜைகளுக்கு கூட தொற்று அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூர் மற்றும் தாய்வான் உள்ளிட்ட பல ஆசிய நாடுகளுடன் அவுஸ்ரேலியா தொடர்ந்தும் விவாதங்களை நடத்தி வருவதாக பிரதமர் ஸ்கொட் மொரிஸன் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.