குண்டு தாக்குதல்தாரியின் ஊடக பிரதானி காத்தான்குடியில் கைது
In இலங்கை May 1, 2019 10:37 am GMT 0 Comments 4595 by : Dhackshala

இலங்கை குண்டுத்தாக்குதல்களின் சூத்திரதாரி என சந்தேகிக்கப்படும் நபரின் ஊடக பிரிவின் பிரதானியாக செயற்பட்டு வந்தவர் ஒருவர் காத்தான்குடியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரை நேற்று (செவ்வாய்க்கிழமை) கைது செய்து குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவ தினமான நேற்று மாலை பொலிஸார் புதிய காத்தான்குடி 3ஆம் பிரிவு 4ஆம் குறுக்கு வீதியைச் சேர்ந்த 38 வயதுடைய முஹமது மன்சூர் முஹமது பைரூஸ் என்பவரை சந்தேகத்தில் கைது செய்துள்ளனர்.
குறித்த நபர் பிரதேசத்தில் உள்ள மருந்தகம் ஒன்றில் கடமையாற்றி வந்துள்ளதுடன் சஹரானின் ஊடக பிரிவின் பிரதானியாக செயற்பட்டு வந்தவர் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவரை குற்றப்புலனாய்வு பிரிவிடம் ஒப்படைத்ததாக பொலிஸ் உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப்புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர் .
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
நாட்டில் மேலும் இருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்ப
-
தமிழக மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர்கள் சமாசம் வடக்கு தழுவிய கதவட
-
விவசாய சங்கங்கள் மற்றும் மத்திய அரசுக்கு இடையிலான 11ஆவது கட்டப் பேச்சுவார்த்தை எந்த முடிவும் எடுக்கப
-
நாட்டில் மேலும் 346 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிர
-
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், முதல்நாள் ஆட்டம் நிறைவுக்க
-
ரஷ்ய கொரோனா வைரஸ் தடுப்பூசியான ‘ஸ்பூட்னிக் வி’க்கு ஹங்கேரி ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூ
-
உலக சுகாதார அமைப்புடன் மீண்டும் இணையும் அமெரிக்காவின் முடிவை ஐக்கிய நாடுகள் சபை வரவேற்றுள்ளது. இதுகு
-
தமிழில் தேசிய கீதத்தை இம்முறையேனும் இசைத்து இன நல்லிணக்கத்திற்கான நம்பகத்தன்மையை வெளிப்படுத்த வேண்டு
-
கொவிட்-19 தொற்றுநோய் மற்றும் பொருளாதாரத்தை மீட்பது போன்ற சவால்களைச் சமாளிக்க, புதிய அமெரிக்க நிர்வாக
-
தொற்றுநோயின் தாக்கம் காரணமாக, பிரிட்டிஷ் சில்லறை விற்பனை கடந்த ஆண்டு வரலாற்றில் மிகப் பெரிய வருடாந்த