சஹ்ரானின் சாரதி குற்றத்தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைப்பு

தேசிய தொஹித் அமைப்பின் தலைவர் சஹ்ரானின் சாரதி காஃபூர் என்ற மொஹமட் ஷரீஃப் ஆதாம் லெப்பே மேலதிக விசாரணைக்காக குற்றத்தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு காத்தான்குடியில் பகுதியில் தீவிர சோதனையின்போது கைதுசெய்யப்பட்ட அவர் இன்று (சனிக்கிழமை) குற்றத்தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இதேவேளை,
மட்டக்களப்பு – வவுணதீவு பகுதியில் இரு பொலிஸார் கொலை செய்யப்பட்ட சம்பவம் பயங்கரவாதிகளின் சதித்திட்டம் எனும் அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
கடந்த வருடம் நவம்பர் மாதம் மட்டக்களப்பு – வவுணதீவு பகுதியில் இரு பொலிஸார் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்திருந்தனர்.
இந்த சம்பவத்தை மேற்கொண்டவர் குண்டுத் தாக்குதலில் தொடர்புடைய சஹரானின் வாகன சாரதியான 53 வயதுடைய முகமது சாஹீர் ஆதம்பாலெப்பை என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
மேலும், மட்டக்களப்பு தேவாலய தற்கொலை குண்டுதாரி முகமட் ஆசாத்தின் தாயார் மற்றும் வாகன சாரதி உட்பட 7 பேரை சந்தேகத்தின் பேரில் காத்தான்குடி பிரதேசத்தில் நேற்று முந்தினம் (வெள்ளிக்கிழமை) குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் கைது செய்திருந்தனர்.
இதன்போது அவரிடமிருந்து மடிக்கணணி மற்றும் கைத்துப்பாக்கியொன்றும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.