சாகரோவ் பரிசு: பெலாரஷிய எதிர்க்கட்சித் தலைவருக்கு வழங்கப்பட்டது!

ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் சிறந்த மனித உரிமை பரிசை பெலாரஸிய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்வெட்லானா டிகானோவ்ஸ்காயா வென்றுள்ளார்.
மேலும், அண்மையில் பெலாரஸில் அமைதியின்மையின் போது தைரியமாகவும் உறுதியுடனும் போராடிய நாட்டின் எதிர்க்கட்சியின் 10 உறுப்பினர்களுக்கு சாகரோவ் பரிசு வழங்கப்பட்டது.
உலகெங்கிலும் உள்ள மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் அதிருப்தியாளர்களை அங்கீகரிக்கும் சாகரோவ் பரிசு ஆண்டுதோறும் சோவியத் விஞ்ஞானியும் அதிருப்தியடைந்த ஆண்ட்ரி சாகரோவின் நினைவாக வழங்கப்படுகிறது.
கிழக்கு ஐரோப்பிய நாடான ஐரோப்பிய நாடான பெலாரஸில் 1994ஆம் ஆண்டு முதல் அலெக்சாண்டர் லூகாஷென்கோவே ஜனாதிபதியாக பதவி வகித்து வருகிறார்.
இதற்கிடையில், கடந்த மாதம் 9ஆம் திகதி; நடைபெற்ற தேர்தலில், அலெக்சாண்டர் 80.23 சதவீத வாக்குகளை பெற்று வெற்றி பெற்றதாக அந்நாட்டு தேர்தல் ஆணைக்குழு அறிவித்தது. இதனால் அவர் ஆறாவது முறையாக ஜனாதிபதியாக பதவியேற்றார்.
ஆனால், மக்கள் மத்தியில் பெரும் ஆதரவுபெற்றிருந்த அலெக்சாண்டருக்கு எதிராக போட்டியிட்ட பிரதான எதிர்கட்சி தலைவரான ஸ்வியாட்லானா சிகானெஸ்கயா, 8.9 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதனால், இந்த தேர்தலில் மோசடி இடம்பெற்றதாக பலராலும் கூறப்பட்டது. எனினும் இதனை அலெக்சாண்டர் ஏற்கவில்லை. இதையடுத்து இதற்கு எதிராக பெலாரஸில் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றது.
இதற்கிடையில், தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட சில நாட்களிலேயே எதிர்கட்சி தலைவரான ஸ்வெட்லானா டிகானோவ்ஸ்காயா கைது நடவடிக்கைக்கு அஞ்சி அண்டைநாடான லிதுவேனியாவில் தஞ்சம் அடைந்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.