சாய்ந்தமருது பகுதியில் 3 குண்டு வெடிப்புக்கள்: குறித்த பகுதியில் பரபரப்பு – Update
In ஆசிரியர் தெரிவு April 26, 2019 2:19 pm GMT 0 Comments 3788 by : Litharsan

சாய்ந்தமருது பகுதியில் 3 குண்டு வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இதன்போது உயிரிழப்புக்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் காயமடைந்தவர்கள் அஸ்ரப் வைத்தியசாலை, மற்றும் கல்முனை வைத்தியசாலைகளுக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாய்ந்தமருது பகுதியில் பரபரப்பு – பாரிய வெடிப்பு சம்பவங்கள் பதிவு? – (இரண்டாம் இணைப்பு)
சற்றுமுன்னர் கிடைத்த தகவலின் படி சாய்ந்தமருது பகுதியில் இரண்டு குண்டுவெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் நிந்தவூர் பகுதியில் குண்டுகளுடன் 2 பைகளும் வீதியில் போடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, சுற்றிவளைப்புத் தேடுதலையடுத்து ஆயுதக் குழு ஒன்று தப்பியோடியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சாய்ந்தமருது பகுதியில் பாரிய வெடிப்பு சம்பவம்? – (முதலாம் இணைப்பு)
அம்பாறை, சாய்ந்தமருது பகுதியில் வெடிப்பு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சாய்ந்தமருது அஸ்ரப் வைத்தியாசலையின் பின்புறமாகவுள்ள சுனாமி வீட்டுத்திட்டப் பகுதியில் குறித்த வெடிவிபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்மாந்துறை சுற்றிவளைப்பின் போது அங்கிருந்து தப்பியோடிய நபரே குறித்த பகுதியில் குண்டை வெடிக்க வைத்ததாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பகுதியில் பெரும் சத்தத்துடன் குறித்த வெடி சம்பவம் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இது குறித்த மேலதிக தகவல் இன்னும் வெளியாகவில்லை.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.