சிங்கப்பூரிலும் உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு!

பிரித்தானியாவில் வேகமாகப் பரவும் வகையில் தன்னைத் தகவமைத்துக் கொண்ட புதிய ரக கொரோனா வைரஸ், தற்போது சிங்கப்பூரிலும் பரவத் தொடங்கியுள்ளது.
பிரித்தானியாவிலிருந்து சிங்கப்பூர் திரும்பிய 17 வயது மாணவிக்கு உருமாறிய புதிய வகை கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து சிங்கப்பூர் திரும்பியவர்களில் மேலும் 11 பேருக்கு உருமாறிய புதிய வகை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் வலுப்பெற்றுவரும் புதிய வகை வைரஸ் (பி-117) பரவல் அச்சுறுத்தல் காரணமாக, சர்வதேச ரீதியாக பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதனிடையே, பிரித்தானியாவுடன் தொடர்புடைய விமான சேவைகள் உள்ளிட்ட பல நடவடிக்கைகளை ஏறக்குறைய 40 நாடுகள் இடை நிறுத்தியுள்ளன.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.