சிங்கள மொழியில் எழுதப்பட்ட வெற்றிச்சான்றிதழை ஏற்க மறுத்த இளைஞர்கள் – கிளிநொச்சியில் சம்பவம்
In இலங்கை January 4, 2021 8:59 am GMT 0 Comments 1778 by : Dhackshala
கிளிநொச்சியில் சிங்கள மொழியில் எழுதப்பட்ட வெற்றிச்சான்றிதழை ஏற்க இளைஞர்கள் மறுத்துள்ளனர்.
தேசிய இளைஞர் சேவைகள் மற்றத்தினால் வடக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட வீட்டுத்தோட்ட போட்டியில் வெற்றியீட்டிய இளைஞர்களை கௌரவிக்கம் நிகழ்வில் குறித்த சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வின் நிறைவில், சான்றிதழ்கள் தனி சிங்கள மொழியில் காணப்பட்டமை தொடர்பில் இளைஞர்கள் அதிப்தி வெளியிட்டனர்.
இதன் காரணமாக குறித்த நிகழ்வின் இறுதியில் அமைதியின்மையும் ஏற்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்விடயம் தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட இளைஞர் மன்ற உதவி பணிப்பாளர் தபேந்திரன் குறிப்பிடுகையில், “குறித்த சான்றிதழானது அவசரமாக இளைஞர்களுக்கு வழங்குவதற்காக நேற்று வரவழைக்கப்பட்டது.
குறித்த சான்றிதழானது இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர் உள்ளிட்ட முக்கியமானவர்களின் ஒப்பத்துடன் வழங்கப்பட்டுள்ளது.
கொவிட் 19 காலப்பகுதியில் சிங்கள மொழி எழுதுவினைஞர்கள் மாத்திரமே கடமையில் இருந்தனர். தமிழ் ஊழியர்களை அழைக்க முடியாது போனமையாலே இவ்வாறான சிக்கல் ஏற்பட்டது” என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பாக மாகாண உதவி பணிப்பாளர் மற்றும் மாவட்ட உதவி பணிப்பாளர்களின் கையொப்பத்துடன் அவர்களுக்கு தேவையான மொழியில் சான்றிதழ்களை வழங்குமாறு தலைமை காரியாலயத்திலிருந்து அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட உதவி பணிப்பாளர் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.