சிரேஸ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் 12ஆம் ஆண்டு நினைவு தினம் மட்டக்களப்பில் அனுஸ்டிப்பு
In இலங்கை January 9, 2021 4:37 am GMT 0 Comments 1440 by : Yuganthini
படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் 12வது நினைவு தின நிகழ்வு, மட்டு.ஊடக அமையத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.
நேற்று (வெள்ளிக்கிழமை) மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்வில் தீபச்சுடர் ஏற்றப்பட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
குறித்த அஞ்சலி நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சிரேஸ்ட ஊடகவியலாளருமான அரியநேந்திரன், மட்டக்களப்பு மாநகர மேயர் தி.சரவணபவன் மற்றும் மாவட்ட ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது சிரேஸ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் உருவப்படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு, ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதை தொடர்ந்து மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் மறைந்த ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலைக்கு நீதி கோரி அஞ்சலி உரைகள் நிகழ்த்தப்பட்டதுடன், லசந்த உட்பட படுகொலைசெய்யப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களின் விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.