சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருது குறித்த அறிவிப்பு
In சினிமா April 25, 2019 5:27 am GMT 0 Comments 1805 by : adminsrilanka

சிறந்த திரைப்படங்கள், சிறந்த கலைஞர்களுக்கான தேசிய விருது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அந்தவகையில், இம்முறை 66 ஆவது தேசிய விருது இந்திய மத்திய அரசு சார்பாக வழங்கப்படவுள்ளது.
தேசிய அளவில் சிறந்த திரைப்படத்துக்கும் சிறந்த இயக்கம், கதை, ஒளிப்பதிவு, இசை, எடிட்டிங், சிறந்த நடிகர்கள், பாடல்கள் என பல்வேறுத்துறைகளுக்கு தேசிய விருது வழங்கப்படவுள்ளது.
அதேநேரம், மொழி ரீதியாகவும் சிறந்த படங்களுக்கு தேசிய விருதுகள் வழங்கப்படும். தேசிய விருதினை குடியரசுத் தலைவர் வழங்குவார். அதனைத் தொடர்ந்து கலைத் துறையில் வாழ்நாள் முழுவதும் சிறப்பான பங்களிப்பை வழங்கும் கலைஞர்களுக்கு தாதாசாஹேப் பால்கே விருது வழங்கப்படுகின்றது.
இந்த வருடம் இந்திய நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றுவருவதால் இந்த வருடத்துக்கான தேசிய விருதுகள் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தபிறகு வழங்கப்படும் என எதிர்பார்கப்படுகின்றது.
ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாதம் தேசிய விருது பெறுபவர்கள் பற்றிய அறிவிப்பும், மே மாதம் விருது வழங்கும் நிகழ்வும் நடைபெறகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
விமான நிலையங்களை மீண்டும் திறந்து ஐந்து நாட்களுக்குள் 500 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள
-
அவுஸ்ரேலியாவில் அவசர பயன்பாட்டுக்காக பைசர் கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த அவுஸ்திரேலிய மருத்துவ சபை இ
-
யாரும் உணராமல் நாடு வேகமாக இராணுவமயமாக்கலை நோக்கி செல்கிறது என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தல
-
நீதிமன்றம் சட்டத்தின் உதவியை நாடும் மக்களின் இல்லமாக மாற வேண்டும் என விரும்புவதாக பிரதமர் மஹிந்த ராஜ
-
நாட்டில் மேலும் 383 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு
-
தாய்வானுடன் மோதல் போக்கை தவிர்த்து அர்த்தமுள்ள பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என சீனாவுக்கு அமெரி
-
கொரோனா தடுப்பூசி குறித்து வதந்தி மற்றும் அவதூறு பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று
-
கடந்த ஜனவரி 15ஆம் திகதி வரை, நோய்த்தடுப்பு மருந்துகளைத் தொடர்ந்து 90 பாதகமான நிகழ்வுகள் பதிவாகியுள்ள
-
எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறஉள்ள கல்வி பொதுத் தராதர சாதாரணதர பரீட்சையின் விடைத்தாள் திருத்தும் பணி
-
இலங்கை அணிக்கெதிரான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகளால் வெற்