சிறுமிக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை – நெஞ்சை உருக்கும் ஒளிப்படம்!
In இங்கிலாந்து April 20, 2019 10:23 am GMT 0 Comments 2141 by : Benitlas

பிரித்தானியாவில் இரண்டு வயது சிறுமி அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்.
சிறுமியின் வயிறு வீங்கிய நிலையில் இருக்கும் ஒளிப்படம் வெளியாகி பார்ப்போரை கண்கலங்க வைத்துள்ளது.
பிரித்தானியாவின் Blackpool பகுதியைச் சேர்ந்தவர் Shannon Latham 23 வயதான இவர் தன் மகளின் நிலை குறித்து கூறுகையில், ‘எந்த ஒரு பெற்றோரும் தன் குழந்தைக்கு இப்படி ஒரு பிரச்சனை வரும் என்று நினைக்கமாட்டார்கள்.
கடந்த மாதம் என் மகள் Cleo Keenan(2)-வுக்கு ஏற்பட்ட வயிற்று வலி காரணமாக உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம்.
அப்போது அவளுக்கு சிடி ஸ்கேன் எடுக்க வேண்டும் என்று சொன்னார்கள். அப்போது எடுத்துப் பார்த்த போது அவளின் வயிற்றின் உள்ளே பெரிய கட்டி ஒன்று இருப்பதைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
அதன் பின் இரண்டு வாரங்கள் கழித்து நடத்தப்பட்ட சோதனையில் Cleo Keenan-க்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. அது மூன்றாம் கட்டம் எனவும், அட்ரீனல் சுரப்பி பகுதியில் இந்த நோயின் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனால் அவளின் வயிறு வீங்கிக் கொண்டு சென்றதால், பார்க்க கர்ப்பமாக இருக்கும் பெண்ணின் வயிறு போன்று இருக்கிறது’ என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இந்த நோயின் பாதிப்பு இருந்தாலும், சிறுமி நன்றாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.