சிறைச்சாலைகளில் இன்னுமொரு கொரோனா கொத்தணி ஆபத்து?
In இலங்கை November 10, 2020 8:06 am GMT 0 Comments 1631 by : Yuganthini

நாட்டிலுள்ள சிறைகளில் அதிகளவான கைதிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனால் இன்னுனொரு கொரோனா கொத்தணி உருவாவதற்கான ஆபத்து காணப்படுகின்றதென சிறைச்சாலை ஆணையாளர் சந்தன ஏகநாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்துள்ளமை தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக சந்தன ஏகநாயக்க மேலும் கூறியுள்ளதாவது, “சிறைச்சாலைகளுக்கு கைதிகள் மாற்றப்படுவது முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.
சிறைகளில் உள்ளவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று, எவ்வாறு ஏற்பட்டமை என்பது தொடர்பாக மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அத்துடன் சிறைகளிலுள்ள பெரும்பாலான பெண் கைதிகள், இதய நோயினால் பாதிக்கப்பட்டவர்களாக காணப்படுகின்றனர்.
மேலும் சிறைகளில், கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக 109 வழக்குகள் பதிவாகியுள்ளன. அவை வெலிகட மற்றும் போகம்பர சிறைகள் ஆகியவற்றிலேயே பதிவாகியுள்ளன.
அதில் வெலிகட சிறைச்சாலையில் மாத்திரம் 99 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்தனர்.
அத்துடன், சிறைச்சாலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்தமையினால் சிறை வைத்தியசாலை, கொரோனா சிகிச்சை மையமாக பராமரிக்கவும் தீர்மானிக்கப்பட்டது.
இதேவேளை, மட்டுப்படுத்தப்பட்ட வசதிகளுக்குள், அதிகமான மக்கள் வரையறுக்கப்பட்ட இடங்களில் தங்க வைக்கப்படுகின்றமையினால், மீண்டுமொரு கொரோனா கொத்தணி உருவாவதற்கு வாய்ப்புள்ளது.
எனினும், சிறைச்சாலைகளுடன் தொடர்புடைய அபாயங்களை கணக்கில் எடுத்துக்கொண்டு, கொரோனா வைரஸ் தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்த வலுவான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.