சில மணிநேரங்களில் புயலின் மையப்பகுதி கரையைக் கடக்கும்- இந்திய வானிலை ஆய்வு மையம்

நிவர் புயலின் மையப்பகுதி இன்னும் இரண்டு நேரத்தில் கரையைக் கடந்துவிடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரித்துள்ளது.
வங்கக்கடலில் உருவான நிவர் புயலின் மையப்பகுதி புதுச்சேரி அருகே கரையைக் கடக்கத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், நிவர் புயலின் தற்போதைய நிலைவரம் தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “அதிதீவிர நிவர் புயல் தற்போது கடலூரில் இருந்து கிழக்கு-வடகிழக்கே 45 கிலோமீற்றர் தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து கிழக்கே 30 கிலோமீற்றர் தூரத்திலும் உள்ளது.
அதேபோல், புயல் சென்னையில் இருந்து தெற்கு-தென்மேற்கே 110 கிலோமீற்றர் தொலைவில் உள்ளது.
புயலின் மையப்பகுதி கடந்த ஆறு மணி நேரமாக 16 கிலோமீற்றர் வேகத்தில் வடகிழக்குத் திசை நோக்கி நகர்ந்து வந்துள்ளது.
நிவர் புயலின் மையப்பகுதி புதுச்சேரி கடற்கரை அருகே அடுத்த இரண்டு மணி நேரத்தில் கரையைக் கடந்துவிடும்.
அப்போது, புயல் காரணமாக காற்றின் வேகம் 120 முதல் 130 கிலோமீற்றர் என்ற அளவில் இருக்கும். அதிகபட்சமாக 145 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.