சிவாஜிலிங்கத்துக்கு பாம்பு தீண்டியது- மருத்துவமனையில் அனுமதி

முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்துக்கு பாம்பு தீண்டிய நிலையில் பருத்தித்துறை – மந்திகை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார்.
வல்வெட்டித்துறை நகர சபைக்கு அருகாமையில் உள்ள அவரது அலுவலகத்திலிருந்து இன்று (வெள்ளிக்கிழமை) இரவு மணியளவில் வீடு செல்வதற்காக அவர் அலுவலகத்தின் கதவை மூடிய போது அதிலிருந்த பாம்பு கையில் தீண்டியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அவர், மந்திகை ஆதார வைத்தியசாலையில் உடனடியாக சேர்க்கப்பட்டார். அங்கு மருத்துவ பரிசோதனையின் பின்னர் அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.