சீனாவின் தொன்மை வாய்ந்த விளையாட்டான குயிண்டோங் படகுத் திருவிழா!
In விளையாட்டு April 8, 2019 6:33 am GMT 0 Comments 1800 by : Anojkiyan
பாரம்பரியத்தை கட்டிக்காக்கும் சீனாவின் தொன்மை வாய்ந்த விளையாட்டாக படகுப்போட்டி காணப்படுகிறது. எனினும், அது குறித்து பெரும்பாலான மக்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
அவ்வாறான ஒரு பழமையான படகுப்போட்டி குறித்துதான் தற்போது பார்க்க இருக்கின்றோம்…
கிருஸ்துவிற்கு முற்பட்ட காலத்தில் ஆரம்பிக்கப்பட்டு இன்றும் தொடர்ந்து விளையாடப்பட்டு வரும் ஒரு விசித்திரமான படகுப் போட்டியும் சுவாரஷ்யம் மிக்கதுமான படகு போட்டி குறித்த செய்திக்குள் நுழையலாம்….
கிண்ணம், பட்டம், பதக்கம் என்பவற்றிற்கும் அப்பால், வரலாற்றுக்காகவும் பாரம்பரியத்திற்காகவும் உயிரைப் பணயம் வைத்து நடத்தப்படும் போட்டியாக இது அமைந்துள்ளது.
இவ்வாறான புகழ் மிக்க குயிண்டோங் படகுத் திருவிழா நேற்று முன் தினம், கிழக்கு சீனாவின் ஜியாங்சு மாகாணம் டைஸோ நகரத்தில் நடைபெற்றது.
இதில், வண்ணமயமான கவர்ச்சி மிக்க 500 படகுகள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படகுக் குழுக்கள் இந்த படகு திருவிழாவில் பங்கேற்றன.
படகு பந்தயத்தை தொடர்ந்து நாட்டுப்புற நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அத்தோடு பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தும் வகையிலான அழகிய கப்பல்களும் காட்சிப்படுத்தப்பட்டன.
வண்ணமயமான அலங்கரிக்கப்பட்ட படகுகள் பங்கேற்ற இப்பந்தயத்தை உள்நாட்டினத்தவர்கள் மட்டுமல்ல ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் கண்டுகளித்தனர்.
இப்பந்தயத் தொடர் குறித்து பார்வையாளர் ஒருவர் கூறிய கருத்துக்கள் இவை,
“இது ஒரு அதிர்ச்சியூட்டும் காட்சியாகும், அதே நேரத்தில் பல படகுகள் படகில் பயணம் செய்வது முதல் தடவையாகும்.
இது போன்ற பல நாட்டுப்புற நிகழ்ச்சிகளைக் காண்பது மிகவும் வேடிக்கையானது, இது பார்க்க மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது” என கூறினார்.
1368ஆம் மற்றும் 1644ஆம் ஆண்டு மிங் வம்சத்திற்கு உரிய இந்த குயிண்டோங் படகுத் திருவிழாவானது அஒரு வளமான நாடு, அமைதியான மற்றும் வசதியான வாழ்க்கைக்கான மக்களின் விருப்பங்களை இது காட்டுகிறது.
சீனாவில் மிகச்சிறந்த மற்றும் பண்டைய நீர் திருவிழா இது. குறித்த படகுத் திருவிழாவானது கடந்த 2008ஆம் ஆண்டில் ஒரு தேசிய அறிமுக கலாச்சார பாரம்பரியமாக பட்டியலிடப்பட்டது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.