சீனா கிராண்ட் பிரிக்ஸ்: லீவிஸ் ஹமில்டன் முதலிடம்
In விளையாட்டு April 15, 2019 6:13 am GMT 0 Comments 1990 by : Anojkiyan

பர்முயுலா-1 கார்பந்தயத்தின் மூன்றாவது சுற்றான சீனா கிராண்ட் பிரிக்ஸ் சுற்றில், மெர்சிடஸ் பென்ஸ் அணியின் வீரரும், நடப்பு சம்பியனுமாகிய லீவிஸ் ஹெமில்டன் முதலிடம் பெற்றார்.
ஒவ்வொரு ஆண்டும் ‘பார்முலா 1’ கார் பந்தயம், 21 சுற்றுகளாக நடைபெறும். ஒவ்வொரு சுற்றும் ஒவ்வொரு நாடுகளில் நடைபெறும்.
இதன்படி, நடப்பு ஆண்டின் மூன்றாவது சுற்றான சீனா கிராண்ட் பிரிக்ஸ், நேற்று சன்காய் சர்வதேச ஓடுதளத்தில் நடைபெற்றது.
இதில் 305.066 கிலோ மீட்டர் பந்தய தூரத்தை நோக்கி, 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் காரில் சீறிப்பாய்ந்தனர்.
இதில் மெர்சிடஸ் பென்ஸ் அணியின் வீரரான லீவிஸ் ஹெமில்டன், பந்தய தூரத்தை 1 மணித்தியாலம் 32 நிமிடங்கள் 06.350 வினாடிகளில் இலக்கை கடந்து முதலிடத்தை பிடித்தார். அத்தோடு, அவருக்கு வழங்கப்படும் முதலிடத்திற்கான 25 புள்ளிகளும் வழங்கப்பட்டன
அவரை விட 6.552 வினாடிகள் பின்தங்கிய நிலையில், பந்தய தூரத்தை கடந்த, மற்றொரு மெர்சிடஸ் பென்ஸ் அணியின் வீரரான வால்டெரி போட்டாஸ், இரண்டாவது இடத்தை பெற்றார். அத்தோடு அவர், இரண்டாம் இடத்திற்கான 18 புள்ளிகளையும் பெற்றுக் கொண்டார்.
13.744 வினாடிகள் பின்தங்கிய நிலையில், பந்தய தூரத்தை கடந்த பெர்ராரி அணியின் வீரரான பெஸ்டியன் வெட்டல், மூன்றாவது இடத்தை பிடித்தார். அதற்கு அவருக்கு 15 புள்ளிகள் வழங்கப்பட்டன.
இதுவரை நடைபெற்று முடிந்துள்ள மூன்று சுற்றுகளின் அடிப்படையில், லீவிஸ் ஹெமில்டன் 68 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.
வால்டெரி போட்டாஸ் 62 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், ரெட்புல் அணியின் வீரரான மேக்ஸ் வெர்ஸ்டபேன் (ஆயஒ ஏநசளவயிpநn), 39 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.
இத்தொடரின் நான்காவது சுற்றான அஸர்பைஜன் கிராண்ட் பிரிக்ஸ், எதிர்வரும் 28ஆம் திகதி, பெகு சிட்டி சர்வதேச ஓடுதளத்தில் நடைபெறவுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.