சீன தயாரிப்பான சினோபார்ம் தடுப்பூசியை நாட்டில் முதல் நபராக செலுத்திக்கொண்டார் கம்போடிய பிரதமர்!

சீன தயாரிப்பான சினோபார்ம் தடுப்பூசியை நாட்டில் முதல் நபராக, கம்போடிய பிரதமர் ஹூன்சென் செலுத்திக்கொண்டுள்ளார்.
கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகள் மீதான நம்பிக்கையை உறுதிப்படுத்தும் வகையில் அவர் இந்த முடிவினை எடுத்ததாக கூறினார்.
கம்போடியாவுக்கு நன்கொடையாக சீனா வழங்கியிருக்கும் 10 இலட்சம் தடுப்பூசி டோஸ்களை ஏற்பதாக கூறியுள்ள ஹூன்சென், நாட்டு மக்களுக்கு இந்த தடுப்பூசி இலவசமாக போடப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த 10 லட்சம் டோஸ்கள் போதாது என்றும், நாட்டில் 80 சதவீத மக்களுக்கு தடுப்பூசி போட திட்டமிட்டு இருப்பதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.