சீன பூந்தோட்ட கலையின் தனித்துவத்தை விளக்கும் கண்காட்சி ஆரம்பம்!
In உலகம் April 16, 2019 6:27 am GMT 0 Comments 1844 by : adminsrilanka

விவசாயத்தால் வளர்ந்த நாடுகளே அதிகம் என்பதுடன், வீழ்ந்த நாடு என்று ஒன்றில்லை. இன்றைய நவீன உலகத்திலும் சீனா தனது விவசாயத்துறையையும், தோட்டக்கலையையும் வளர்ப்பதில் பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.
இலங்கை, இந்தியா போன்ற நாடுகள் விவசாயத்தை மறந்து வீடமைப்பு மற்றும் காடழிப்பை மேற்கொண்டு வரும் நிலையில், தமது இருப்பை தக்கவைத்துக் கொள்வதற்கும், தோட்டக்கலையை ஊக்குவிக்கும் வகையிலும் சீனா மாபெரும் சர்வதேச தோட்டக்கலை கண்காட்சியொன்றை ஏற்பாடு செய்துள்ளது.
இதற்காக சிறிய மலைப் பிரதேசமொன்றையே தயார்படுத்தி வருகின்றனர் சீனர்கள். தலைநகர் பீஜிங்கின் யான்குயின் மாவட்ட இறுதி எல்லையாக கொண்ட ரியான்ரியான் மலைப்பகுதி சுமார் 142,000 சதுர கிலோமீற்றர்களையும் 25 மீற்றர் உயரத்தையும் கொண்டுள்ளது.
மிக அழகிய இயற்கை காட்சிகளை கொண்ட இந்த கண்காட்சி பிரதேசம் 2019 ஆம் ஆண்டு பீஜிங் சர்வதேச தோட்டக்கலை கண்காட்சிக்காக தயார்படுத்தப்பட்டு வருகின்றது.
அதன் ஒரு பாகம் பீஜிங் தலைநகரை எல்லையாக கொண்டுள்ளது. யோங்னின் காட்சி அரங்கு மற்றும் மலர் சோலைகளைப் போன்ற படிமுறை தளங்கள் என்பன முக்கிய இடம்பெற்றுள்ளன.
இது சீனக் கண்காட்சிக் கூடங்களைக் கொண்ட முக்கிய நிலப்பரப்பு பகுதியாக அமைக்கப்பட்டுள்ளது. குறித்த கண்காட்சி கூட பகுதியில் 94 தூண்கள் மலர் குடைகளைப் போன்ற தோற்றத்தில் உள்ளதுடன், பல வண்ணங்களை கொண்ட குய்ருய் திரையரங்கமும் இங்கு முக்கிய இடம் பெறுகிறது.
வசந்த காலத்தில் பூக்கும் 20 வகையான மலர்களும் ரியான்ரியான் மலைப்பகுதிகளில் எதிர்வரும் 162 நாட்களுக்கு தொடரும் கண்காட்சிக்காட்சிகாக மலர வைக்கப்பட்டுள்ளன.
இந்த கண்காட்சி எதிர்வரும் ஏப்ரல் 29 ஆம் திகதி தொடக்கம் ஆரம்பமாகவுள்ளதுடன், ஏறத்தாழ 16 மில்லியன் மக்கள் இந்த கண்காட்சியில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இதுகுறித்து கண்காட்சி செயற்றிட்டத்தின் திட்டமிடல் திணைக்கள பணிப்பாளர் மாவோ ஷிங்கியாங் கூறுகையில்,”எமது பாரம்பரிய விவசாய கலாசாரத்தையும், சீன தோட்டக்கலை மற்றும் மலர் அலங்கார வல்லமைகளையும் ஊக்குவிக்கும் முகமாக இந்த கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனவே, பயிர்வளர்ப்பு கலாச்சாரத்துடன் தொடர்புடைய தோட்டக்கலை எக்ஸ்போவிற்கு ஒரு நிலப்பரப்பை உருவாக்க நாங்கள் எண்ணினோம். எங்கள் முன்னோர்களின் ‘விவசாய கலாச்சாரத்தை கௌரவிக்கும் முகமாக இந்த ஏற்பாடுள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.
இதற்காக பயன்படுத்தப்பட்டு மலைப்பகுதியும் மாறுபட்ட பூந்தோட்ட வடிவங்களை கொண்டுள்ளதுடன், சீனாவின் வடக்கு மற்றும் தெற்கு பிராந்தியங்களின் சீன பூந்தோட்ட கலையின் தனித்துவத்தை விளக்கும் வகையில் உள்ளன.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.