சீயோன் தேவாலயத்திற்கு பிரதமர் திடீர் விஜயம் – மட்டு.வில் படையினர் குவிப்பு!
In இலங்கை May 3, 2019 5:08 am GMT 0 Comments 2604 by : Dhackshala
தற்கொலை குண்டுதாக்குதல் மேற்கொள்ளப்பட்ட மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்திற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க திடீர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் அவர் இன்று (வெள்ளிக்கிழமை) காலை இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
பிரதமரின் விஜயத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் பொலிஸார், இாரணுவத்தினர், விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சீயோன் தேவாலயத்திற்குச் சென்று செய்திகளை சேகரிக்க ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லையென தெரிவித்த அவர், ஊடகவியலாளர்களை சுமார் 100 மீற்றர் அளவு தொலைவில் நிற்குமாறு படையினர் அறிவுறுத்தியதாகவும் தெரிவித்தார்.
கடந்த மாதம் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இலங்கையின் பல இடங்களில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதல்களில் சீயோன் தேவலயமும் உள்ளடங்கும். இந்த தாக்குதல் காரணமாக மட்டக்களப்பில் 30இற்கும் அதிகமானோர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
தமிழக மக்களுக்கு தாயாக இருந்து பணியாற்றியவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா என முதலமைச்சர் எடப்பாடி ப
-
ஜனநாயகம், மனித உரிமைகள், அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்து எவரும
-
யாழ்ப்பாணம் மாவட்ட கடற்றொழிலாளர்கள் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணியொன்றை இன்று (புதன்கிழமை) முன்னெடுத்த
-
கனடாவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மேலும் 6,953 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாத
-
இலங்கையின் பொறுப்புக்கூறலை வலியுறுத்தி ஐ.நா மற்றும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு ஏற்கனவே ஒரு
-
யாழ்.நகரில் புதிதாக திறந்து வைக்கப்பட்டுள்ள நெடுந்தூர போக்குவரத்துகளுக்கான பேருந்து நிலையத்தில் போட
-
அயர்லாந்து அணிக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று ஆப்கானிஸ்தான் அணி
-
கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்த சர்ச்சைக்கு மத்தியில் அஸ்ட்ராஜெனெகா
-
விவசாயிகள் பேரணி வன்முறையாக வெடித்த நிலையில் அது தொடர்பாக 22 வழக்குகள் பதிவு செய்துள்ளதாக டெல்லி பொல
-
பரிசோதனைகளை நடத்துவதற்காக கொங்ஹொங்கின் யாவ் மா டேய் என்ற பகுதி நேற்று முதல் முழுமையாக முடக்கப்பட்டுள