சீயோன் தேவாலய தற்கொலை குண்டுதாரியின் தாயார் உட்பட 4 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு
In இலங்கை December 8, 2020 10:22 am GMT 0 Comments 1615 by : Dhackshala

சீயோன் தேவாலய தற்கொலை குண்டுதாரியின் தாயார் உட்பட 4 பேரையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த நால்வரையும் எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மை சூம் தொழில்நுட்பத்தின் ஊடாக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.ஏ.றிஸ்வான் உத்தரவிட்டார்.
கடந்த வருடம் ஏப்ரல் 21ஆம் திகதி சஹ்ரான் தலைமையில் மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் தற்கொலை குண்டு தாக்குதலை மேற்கொண்ட காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த முஹமது ஆசாத் என்பவரின் தாயாரான அலியார் லதீபா பிவி என்பவர் கைது செய்யப்பட்டார்.
அதேவேளை, இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் தடுத்துவைக்கப்பட்டு, விசாரணையின் பின்னர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் தொடர்ந்தும் வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.