சுகாதார நடைமுறைகளை பேணாததால் பருத்தித்துறையில் 2 கடைகளுக்கு சீல்
In இலங்கை December 21, 2020 8:30 am GMT 0 Comments 1559 by : Yuganthini

சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாமல் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியதாக இரண்டு வர்த்தக நிலையங்கள் பருத்தித்துறை நகர பொதுச்சுகாதார பரிசோதகரால் சீல் வைத்து மூடப்பட்டன.
பருத்தித்துறை நகரில் உள்ள புடவைக் கடை ஒன்றும் அழகுசாதனப் பொருள் விற்பனை நிலையம் ஒன்றுமே இவ்வாறு இன்று (திங்கட்கிழமை) மூடப்பட்டன.
மேல் மாகாணத்துக்குச் சென்று திரும்பிய உரிமையாளர்கள், சுகாதார மருத்துவ அதிகாரிக்கு அறிவித்தல் வழங்காமல் சுகாதார நடைமுறைகளை மீறி, வர்த்தக நிலையங்களை திறந்து வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டதாலேயே அவை மூடப்பட்டன.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.