சுகாதார பாதுகாப்பு முறைகளுடன் ரயில் சேவைகள் ஆரம்பம்
In இலங்கை November 23, 2020 2:59 am GMT 0 Comments 1335 by : Dhackshala

சுகாதார பாதுகாப்பு முறைகளுக்கு அமைவாக இன்று (திங்கட்கிழமை) முதல் ரயில் சேவைகள் இடம்பெறவிருப்பதாக இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளுக்கு அமைவாக இன்று முதல் காலை மற்றும் மாலை வேளைகளில் விசேட அலுவலக ரயில்களை சேவையில் ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக ரயில் திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் ஏ.டீ.பி. செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
இந்த ரயில்கள் சுகாதாரப் பிரிவினரால் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ள பொலிஸ் வலய பிரதேசங்களிற்குள் நிறுத்தாது செல்வதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதன்படி, பிரதான புகையிரத பாதை – கொழும்பு கோட்டை தொடக்கம் பொல்கஹவல, ரம்புக்கணை, கண்டி, கனேவத்த, மஹவ வரை சேவையில் ஈடுபடுவதுடன், கீழ் குறிப்பிடப்பட்ட எந்தவொரு புகையிரத நிலையங்களிலும் ரயில்கள் நிறுத்தப்படமாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.