சுதந்திரத்திற்காக போராடிய நிலையில், அதனை காக்கவும் போராட வேண்டியுள்ளது – நல்லகண்ணு

சுதந்திரத்திற்காக போராடிய நிலையில், அதனை காக்கவும் போராட வேண்டியுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு தெரிவித்துள்ளார்.
கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவன நாள், மூத்த தலைவர் நல்லகண்ணு பிறந்த நாள், மறைந்த தலைவர் கே.டி.கே.தங்கமணியின் 19ஆவது நினைவு நாள் நிகழ்ச்சி சென்னை தி.நகரில் நடைபெற்றது. அதில் நல்லகண்ணு, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன், தா.பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன், விசிக தலைவர் திருமாவளவன் ஆகியோர் நேரில் வாழ்த்து தெரிவித்தனர். பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் திரைப்பலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்
இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள நல்லகண்ணு, அரசியல் சட்டத்திற்கு ஆபத்து வந்துள்ளதாக தெரிவித்தார். அரசியல் சட்டம் நிலைக்குமா என்ற கேள்வி வந்துள்ளதாகவும், மனித உரிமை மறுக்கப்படுவதாகவும் நல்லகண்ணு குற்றம்சாட்டினார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.