சுயதனிமைப்படுத்தப்பட்டார் வைத்தியர் அனுருத்த பாதெனிய!

கொரோனா தொற்றாளருடன் நெருங்கி பழகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளமையினைத் தொடர்ந்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர், விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் அனுருத்த பாதெனிய சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர், விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் அனுருத்த பாதெனிய இதனைத் உறுதிப்படுத்தியுள்ளார்.
அவரின் வீட்டில் கடந்த தினம் இடம்பெற்ற விருந்துபசாரம் ஒன்றில் கலந்து கொண்ட வைத்தியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து பாதெணிய தொற்றாளருடன் நெருங்கிப்பழகியவராக அடையாளம் காணப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து அவரை தனிமைப்படுத்துவதற்காக அவரின் வீட்டிற்கு பொது சுகாதார பரிசோதகர் சென்ற போதும் வீட்டில் எவரும் இருக்கவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.