சுயாதீன இசைக் கலைஞர்களின் திறமைக்கு களம் அமைத்துள்ள மதன் கார்க்கி
In சினிமா April 10, 2019 5:27 pm GMT 0 Comments 1733 by : adminsrilanka

சுயாதீன இசைக் கலைஞர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்த ஒரு வசதியான தளத்தை DooPaaDoo உருவாக்கி கொடுக்கின்றது என பாடலாசிரியரும் DooPaaDooவின் இணை நிறுவனருமான மதன் கார்க்கி தெரிவித்துள்ளார்.
அந்தவகையில், ‘காஞ்சனா 3’ திரைப்படத்தின் முழுமையான ஆல்பத்தை உருவாக்கி தமிழ் இசைத் துறையில் தன் பெயரை பதித்திருக்கின்றது எனக் கூறினார்.
தொடர்ந்தும் மதன் கார்க்கி இது குறித்து கூறும்போது, “திறமையான சுயாதீன கலைஞர்கள் இந்த தளத்தின் மூலம் இசைத்துறையில் புகழ் பெறுவது மகிழ்ச்சி அளிக்கின்றது.
தங்கள் ஸ்டூடியோவிற்கு வருகைதந்த ராகவா லோரன்ஸிடம் DooPaaDoo பற்றிய புதிய கருத்துகளை அறிமுகப்படுத்தினோம். புதிய முயற்சிகளை பரிசோதித்து பார்க்க எந்த தயக்கமும் இல்லாமல் அவர் ஒப்புக் கொண்டார்.
அதேநேரம் ‘காஞ்சனா 3’ திரைப்படத்தின் கதையின் சூழ்நிலைகளை அடிப்படையாகக் கொண்டு பாடல்களை பட்டியலிட்டோம். அனைத்து பாடல்களையும் ராகவா லோரன்ஸ் கேட்டார். அதன்பிறகு ஆறு பாடல்களை தேர்ந்தெடுத்தார். அதேநேரம், மீதமுள்ள பாடல்களை அவரது அடுத்தடுத்த திரைப்படங்களில் பயன்படுத்துவதாக எங்களுக்கு உறுதியளித்தார்.
‘காஞ்சனா-3’இல் மிகவும் தனித்தன்மையான விடயம் என்னவென்றால், பாடலின் பின்னணியிலலுள்ள எந்த பெயரையோ அல்லது கலைஞர்களின் அடையாளங்களையோ நாங்கள் வெளிப்படுத்தவில்லை. நாங்கள் நினைத்தது வெற்றியாக மாறி, DooPaaDooஐ அடுத்த கட்டத்துக்கு உயர்த்தியிருக்கின்றது. கலைஞர்களின் பெயர்களைத் தெரிந்து கொள்ளாமலேயே ‘காஞ்சனா-3’ திரைப்படத்தின் பாடல்களை இரசிகர்கள் ரசிப்பதைப் பார்க்க ஆச்சரியமாக இருக்கின்றது” எனக் கூறினார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.