சுற்றுலாத் துறையை ஊக்குவிக்கும் சிறப்பு திட்டம் குறித்து அரசாங்கம் அறிவிப்பு

இலங்கையில் இடம்பெற்ற பயங்கரவாத குண்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து சுற்றுலாத்துறை என்றுமில்லாதவாறு வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
இந்நிலையில், சுற்றுலாத் துறையை மீண்டும் கட்டியெழுப்ப ஒருவருட கால வங்கிக் கடன் நிவாரணங்களை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
நிதி அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போது நிதி இராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.
அதற்கமைவாக இரண்டு வருடகால கடனுக்கு 75 சதவீத வட்டிக் குறைப்பை நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் குறித்த நிவாரணங்களுக்கென அமைச்சரவை அனுமதி பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், இலங்கை சுற்றுலாத் துறையிலுள்ள விடுதிகளுக்கான வற் வரி 15 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்படவுள்ளதாகவும் ஒரு வருடகாலத்துக்கு 5 சதவீதம் வற் வரியே அறவிடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விடுதிகளின் பாதுகாப்பு சாதனங்களுக்கான இறக்குமதி வரி நீங்கப்படவுள்ளதாகவும் இதன்போது எரான் விக்ரமரத்ன மேலும் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
பாக்கு நீரிணையில் தொடரும் மீனவர் பிரச்சினை இலங்கை-இந்திய தமிழர் தொடர்பானது எனவும் இதனைப் பேசித் தீர்
-
நாட்டில் மேலும் 349 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்
-
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நிறைவு
-
ஒட்டுமொத்த தமிழினமும் ஒரே நிலைப்பாட்டில் செயற்படுவதற்காக விரைவில் நடவடிக்கைக் குழு ஒன்றை உருவாக்குவத
-
போர்த்துக்கல்லில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து காணப்படும் நிலையிலும் பெருமளவிலானவர்கள் இன்று ப
-
புதுச்சேரியில் காங்கிரஸ் – தி.மு.க கூட்டணி தொடர்ந்து நீடித்து வருவதாக அம்மாநில முதலமைச்சர் நார
-
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாள் சம்பளமாக ஆயிரம் ரூபாயை வழங்குமாறு வலியுறுத்தியும்
-
இந்தியாவில் இருந்து 13 நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி மருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றமைக்கு உலக சுகாத
-
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜனின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, மட்டக
-
உக்ரேனைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளில் மேலும் சிலர் மத்தளை சர்வதேச விமான நிலையத்தை இன்று (ஞாயிற்றுக்