சூடான் முன்னாள் அரச அதிகாரிகள் அதிரடியாகக் கைது!
சூடான் முன்னாள் அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகளை இடைக்கால இராணுவச் சபை அதிரடியாகக் கைதுசெய்துள்ளது.
அத்தோடு, இடைக்கால இராணுவச் சபையின் தலைவராக ஒருநாள் மத்திரம் பதவி வகித்து விலகிய பாதுகாப்பு அமைச்சர் அவாட் இபினையும் பதவியிலிருந்து நீக்கியுள்ளது. புதிய பாதுகாப்பு அமைச்சராக புலனாய்வு பிரிவின் தலைவர் நியமிக்கப்பட்டுள்ளதாக இராணுவச் சபையின் பேச்சாளர் லெப். ஜெனரல் ஸாம்ஸ் எல் கெபஷி தெரிவித்துள்ளார்.
சூடானில் விரைவாக மக்கள்மயப்படுத்த ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமென மக்கள் கோரி வருகின்றனர். இந்நிலையில், மக்களின் போராட்டத்தை கலைக்க மாட்டோம் என்றும் மக்கள் தெரிவுசெய்யும் புதிய பிரதமரை ஆட்சியில் அமர்த்துவோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சூடானில் கடந்த மூன்று தசாப்தகாலமாக நீடித்த ஒமர் அல் பஷீரின் ஆட்சியை கடந்த வாரம் கவிழ்த்த இராணுவம், தற்போது இடைக்கால இராணுவ சபையொன்றை அமைத்துள்ளது. ஒமரின் அரசாங்கத்தில் முக்கிய பதவிகளை கொண்டவர்கள் இராணுவ சபையில் உள்ளதாக மக்கள் குற்றஞ்சாட்டியதைத் தொடர்ந்து, இராணுவச் சபையில் உடன் அமுலுக்கு வரும் வகையில் தலைவர் மற்றும் பிரதி தலைவர்கள் பதவிகளில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. அத்தோடு, அரசாங்கத்தின் முன்னாள் அதிகாரிகளும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
எவ்வாறாயினும், முழுமையாக மக்கள்மயப்படுத்தப்பட்ட ஆட்சியை உறுதிப்படுத்தும்வரை வீதிகளை விட்டு செல்லமாட்டோம் என மக்கள் தொடர்ச்சியாக போராடி வருகின்றனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.