சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 4 ஆயிரம் ஓட்டங்களை பெற்ற M.S. Dhoni
In கிாிக்கட் April 4, 2019 9:02 am GMT 0 Comments 2441 by : adminsrilanka
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டம் பயனளிக்காமல் போனாலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இன்னொரு மகிழ்ச்சியான செய்தி கிடைத்துள்ளது.
நேற்றைய ஆட்டத்தில் எம்.எஸ.டோனி ஓட்டங்களை பெற்றார் இதன்மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அவர் 4 ஆயிரம் ஓட்டங்களை பெற்றுக் கொடுத்துள்ளார்.
சென்னை அணிக்காக 4 ஆயிரம் ஓட்டங்களை பெற்றுக் கொடுத்த 2-வது வீரர் இவராவார். இதற்கு முன்பு சுரேஷ் ரெய்னா இந்த ஓட்ட எண்ணிக்கையை தொட்டிருந்தார்.
டோனி ஓட்டு மொத்தமாக 161 இன்னிஸ்ஸூகளில் 4135 ஓட்டங்களை பெற்றுள்ளார். இதில் 2 ஆண்டுகள் மாத்திரம் ரைசிங் புனே அணிக்காக விளையாடினார்.
இதேபோல் பந்துவீச்சில் பிராவோ சென்னை சூப்பர் கிங்சுக்காக 100-வது விக்கெட்டை எடுத்து முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார். அவர் மொத்தம் 143 விக்கெட் கைப்பற்றி 3-வது இடத்தில் உள்ளார். பிராவோ குஜராத், மும்பை அணிகளிலும் விளையாடியுள்ளார்.
ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பை இந்தியன்சிடம் 37 ரன்னில் வீழ்ந்து முதல் தோல்வியை தழுவியது. இந்த தோல்வி குறித்து சென்னை அணியின் தலைவர் மகேந்திர சிங் டோனி கூறியதாவது:-
சில விஷயங்களில் நாங்கள் தவறு செய்ததாக நினைக்கிறேன். பந்து வீச்சில் தொடக்கம் நன்றாகவே இருந்தது. 12 முதல் 13-வது ஓவர் வரை முறையாக அனைத்தும் நடந்தது. அடுத்து சில பிடிகளை தவறவிட்டோம். களத்தடுப்பு சற்று தளர்வாகவே இருந்தது.
கடைசி கட்டத்தில் டெத் ஓவர் பந்து வீச்சு மோசமாக இருந்தது. நேர்த்தியாக வீசாமல் ஓட்டங்களை அள்ளிக் கொடுத்தனர். இதனால் தோல்வியை சந்திக்க நேரிட்டது. ஓட்டங்களை கட்டுப்படுத்துவது பற்றி பந்துவீச்சாளர்கள் தெரிந்து இருக்க வேண்டும்.
எங்கள் அணியோடு சில வீரல்கள் இன்னும் இணையவில்லை. பிராவோவும் தற்போது காயம் அடைந்துள்ளார். ஏற்கனவே சில வீரர்கள் காயத்தால் விலகிவிட்டனர். நிகிடி காயம் காரணமாகவும், டேவிட்வில்வே சொந்த காரணத்துக்காகவும் விலகி உள்ளனர். அடுத்தடுத்து போட்டியின் போது ஆடுகள தன்மையை பொறுத்து அணியில் சில மாற்றங்கள் செய்யப்படும்” என்று அவர் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.