சேலத்தில் முதலமைச்சர் தடுப்பூசி போட்டுக் கொள்வார் – விஜயபாஸ்கர்
In இந்தியா February 4, 2021 9:04 am GMT 0 Comments 1442 by : Dhackshala

மக்கள் பிரதிநிதிகளுக்கு தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதி அளித்தவுடன், சேலத்தில் வைத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தடுப்பூசி போட்டுக் கொள்வார் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது, உறுப்பினரின் கேள்விக்கு பதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முதலமைச்சர், அமைச்சர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், பத்திரிகையாளர்கள் மற்றும் 50 வயதிற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போட அனுமதிக்குமாறு மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
ஓரிரு வாரங்களில் நல்ல பதில் கிடைத்தவுடன், சேலத்தில் வைத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தடுப்பூசி போட்டுக் கொள்வார் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.