ஜடேஜாவுக்கு சிட்னியில் அறுவை சிகிச்சை!

அவுஸ்ரேலியா அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது காயமடைந்த இந்தியக் கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் ரவீந்திர ஜடேஜாவுக்கு சிட்னியில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது, பெட் கம்மின்ஸ் வீசிய பந்து ஜடேஜாவின் இடது கை பெருவிரலைப் பதம் பார்த்தது. இதன் நிலைமை மோசமடைந்ததால், அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இத்தகவலை டுவிட்டரில் பதிவிட்டுள்ள ஜடேஜா, ‘அறுவை சிகிச்சையால் சிறிது நாளைக்கு விளையாட முடியாது. மீண்டும் பழைய உற்சாகத்துடன் திரும்பி வருவேன்’ என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.