ஜனவரி முதல் படிப்படியாக சுற்றுலாப் பயணிகளுக்காக நாட்டினை திறக்க நடவடிக்கை – அமைச்சர்
In இலங்கை December 14, 2020 5:22 am GMT 0 Comments 1642 by : Jeyachandran Vithushan
2021 ஜனவரி முதல் நாட்டினை படிப்படியாக சுற்றுலாப் பயணிகளுக்கு மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
காலியில் இடம்பெற்ற அபிவிருத்தி குழு கலந்துரையாடலை அடுத்து கருத்து தெரிவித்த அவர், இந்த முடிவு சுகாதார வழிகாட்டுதல்களின்படி எடுக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டார்.
நாடு முழுமையாக திறக்கப்படஉள்ள நிலையில் அதற்கு முன்னர் செயற்படுத்த வேண்டிய ஒழுங்குமுறை திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
சுகாதார வழிகாட்டுதல்களின்படி குறைபாடுகளை கண்டறிந்து சரிசெய்த பின்னர் படிப்படியாக நாட்டை திறக்க முடியும் என்றும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கூறினார்.
சுற்றுலாப் பயணிகளுக்கு நாட்டை மீண்டும் திறப்பது மற்றும் விமான நிலையத்தை திறப்பது குறித்து தற்போது, தொடர்புடைய அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.