கைதானவர்கள் குறித்த தகவலை ஒப்புக்கொண்டார் கிரியெல்ல – update

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிரான கடிதங்களுடன் கைதானவர்கள் தமது அலுவலக பணியாளர்கள் என்பதை அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல ஒப்புக் கொண்டுள்ளார்.
எனினும் இச்சம்பவம் தொடர்பாக தான் எதனையும் அறிந்திருக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மூவரும் மேலதிக விசாரணைகளுக்காக குற்றத்தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவண் குணசேகர தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதிக்கு எதிரான கடிதங்களுடன் கைதானவர்கள் குறித்த தகவல் வெளியானது!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிரான கடிதங்களுடன் கைதானவர்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
ஜனாதிபதியின் பெயரை குறிப்பிட்டு இன முறுகலை ஏற்படுத்தக் கூடிய சொற்கள் அடங்கிய கடிதங்களுடன் மூவர் கொழும்பு மத்திய அஞ்சல் நிலையத்தில் வைத்து நேற்று(வியாழக்கிழமை) கைது செய்யப்பட்டிருந்தனர்.
அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவின் அலுவலக பணியாளர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களிடமிருந்து 600 இற்கும் மேற்பட்ட கடிதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இந்தநிலையில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களிடம் தொடர்ச்சியாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.