ஜனாதிபதிக்கு எதிரான செயற்பாடு: பின்னணியில் பிரதமர் காணப்படுவதாக சந்தேகம்
ஜனாதிபதிக்கு எதிரான இன முறுகலை தோற்றுவிக்கக்கூடிய செயற்பாட்டின் பின்னணியில் நிச்சயமாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
ஜனாதிபதிக்கு எதிரான இன முறுகலை தோற்றுவிக்கக்கூடிய வகையிலான கடிதங்கள் கிரியெல்லவின் அலுவலக பணியாளர்களால் வெளியிடப்பட்டிருந்தது. இது தொடர்பாக கண்டியில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”சபை முதல்வரும், அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்லவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையொன்றை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
மக்கள் பிரதிநிதிகளின் நம்பிக்கையை இழந்துள்ள அவரை சபை முதல்வர் பதவியிலிருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அமைச்சர் கிரியெல்ல சிங்கள பௌத்த மக்கள் மற்றும் முஸ்லிம் மக்கள் மத்தியில் மோதலை தோற்றுவிக்க முயற்சிக்கிறார்.
அதுமாத்திரமின்றி இச்செயற்பாடு அமைச்சர் கிரியெல்லவினால் தனித்து முன்னெடுக்கப்படவில்லை. இதன் பின்னணியில் நிச்சயமாக பிரதமரும் காணப்படுகிறார்.
இது ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையே காணப்படும் சர்ச்சையின் வெளிப்பாடாகும்” எனத் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
இலங்கை 5 இலட்சம் அஸ்ட்ராஜெனெகா கொவிட்-19 தடுப்பூசிகளை இந்தியாவிடம் இருந்து பெறுவதற்கு நடவடிக்கை மேற்
-
இலங்கைக்கான வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிப்பது குறித்தும் துறைமுகங்கள் விமான நிலையங்கள் எரிசக்தி – மீ
-
வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி டெல்லியை நோக்கி ட்ராக்டர் பேரணியை விவசாயிகள் ஆரம்பித்துள்ளனர். சிங
-
தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1000 ரூபாயாக அதிகாிக்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளதாக அரசாங்
-
நாட்டின் 72ஆவது குடியரசு நாள் விழாவை முன்னிட்டு டெல்லியிலுள்ள போர் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோ
-
டென்மார்க்கில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர்
-
72ஆவது இந்திய குடியரசு தினத்தினை முன்னிட்டு யாழிலுள்ள இந்திய துணை தூதரக அலுவலகத்தில் இன்று (செவ்வாய்
-
சூப்பர் ஸ்ரார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் அண்ணாத்த திரைப்படம் தீபாவளி தினத்தன்று வெளியாகும்
-
மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில், பங்களாதேஷ் அணி 120 ஓட்டங
-
வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர்ச்சியாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்ற நிலையில், இன்று