ஜனாதிபதித் தேர்தலை எந்தக் காரணத்தினாலும் தாமதிக்க இடமளியோம் – ஜி.எல்.பீரிஸ்

ஜனாதிபதித் தேர்தலை எக்காரணம் கொண்டும் தாமதப்படுத்த பொதுஜன பெரமுன இடமளிக்காது என பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.
பொதுஜன பெரமுனவிற்கும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும் இடையிலான பரந்துப்பட்ட கூட்டணி குறித்து இன்று (புதன்கிழமை) எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இதன்போது, மாகாணசபைத் தேர்தல் காலவரைறையின்றி பிற்போடப்பட்டுள்ளது. இதுரையில் ஆறு மாகாண சபைகளின பதவிகாலம் முடிவடைந்துள்ள நிலையில் நேற்று நள்ளிரவுடன் தென் மாகாண சபையும், இம்மாத இறுதியுடன் மேல்மாகாண சபையும் கலைக்கப்பட்டு மக்கள் பிரதிநிகள் இல்லாமல் நிறைவேற்று அதிகாரத்தின் கீழ் 8 மாகாணங்கள் நிர்வகிக்கப்படும் நிலை ஏற்படும் என்று தெரிவித்தார்.
அத்தடன், மாகாண சபைத் தேர்தல பிற்போடுவதற்கு சுதந்திரக் கட்சியும் முழுமையான பொறுப்பு கூறவேண்டும். தேசிய அரசாங்கத்தில் இரண்டு பிரதான கட்சிகளும் மக்களின் அடிப்படை உரிமையான தேர்தல் உரிமையினை பகிரங்கமாக பறித்துள்ளது எனவும் இதன்போது கூறினார்.
மேலும், உயர் நீதிமன்றத்தின் ஐந்து நீதியரசர்கள் வழங்கிய தீர்ப்பிற்கு சவால் விடுக்கும் வகையில் சட்ட வியாக்கியானத்தின் ஊடாக ஜனாதிபதியின் பதவிக் காலத்தை 2020ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21 வரை நீடிக்க சுதந்திரக் கட்சியினர் முயற்சிக்கின்றமை அரசியலமைப்பினை கடுமையாக மீறும் செயற்பாடாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.