ஜனாதிபதி ஆணைக்குழு – மேலதிக பொலிஸ் குழு நியமனம்
In இலங்கை April 16, 2019 9:28 am GMT 0 Comments 1780 by : Dhackshala
ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளின் முதற்கட்ட விசாரணைகளுக்காக மேலதிக பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
அரச நிறுவனங்களில் கடந்த 4 வருடங்களில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் முறைகேடுகள் தொடர்பான விசாரணைகளுக்காக இந்த ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ்மா அதிபரின் கோரிக்கைக்கு அமைய அறுவர் அடங்கிய பொலிஸ் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
ஆணைக்குழுவின் முதற்கட்ட விசாரணைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள பொலிஸ் பிரிவில் 18 உத்தியோகத்தர்கள் அடங்குகின்றனர்.
இதேவேளை, இதுவரை கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளுக்கு இணங்க, முதற்கட்ட விசாரணைகளுக்காக அமைச்சர்கள் மற்றும் அமைச்சுக்களின் செயலாளர்கள் ஆகியோர், ஆணைக்குழுவில் அடுத்த சில வாரங்களுக்குள் முன்னிலையாகவுள்ளனர்.
அதேபோல், ஆணைக்குழுவின் சாட்சி விசாரணைகள் எதிர்வரும் 22ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கமைய, 22ஆம் மற்றும் 23ஆம் திகதிகளில், மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில் இடம்பெற்றதாக கூறப்படும் ஒளடத கொள்வனவு ஊழல் குறித்து விசாரிக்கப்படவுள்ளது.
மேலும், அங்கு காப்புறுதி தொடர்பில் கிடைத்துள்ள முறைபாடுகள் குறித்தும் சாட்சி விசாரணைகள் இடம்பெறவுள்ளன.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
நாட்டில் கொரோனா தொற்று உறுதியான மேலும் ஒரு மரணம் பதிவாகியுள்ள நிலையில் இதுவரை தொற்றினால் உயிரிழந்தவர
-
தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதும் மக்களுக்கு அதனை இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்க
-
போராட்டத்தில் வன்முறை சூழுமானால், அரசின் திசைதிருப்பும் அரசியலுக்கு உதவியாக அமைந்துவிடும் என்பதை விவ
-
இலங்கையின் 73 ஆவது சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டிக்க முன்வருமாறு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களி
-
மேல் மாகாணத்தை விட்டு வெளியேறுவோருக்கு எழுமாறாக பரிசோதனை முன்னெடுக்கப்படும் பொலிஸார் ஊடகப்பேச்சாளர்
-
நாட்டில் மேலும் 369 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு
-
பாகிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின், முதல்நாள் ஆட்டம் நிற
-
ரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 70ஆயிரத்தைக் க
-
வேளாண் சட்டங்களுக்கு எதிராக ட்ராக்டர் பேரணியை முன்னெடுத்துள்ள விவசாயிகள் மீது பொலிஸார் கண்ணீர்புகைக்
-
நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பலரது வாழ்க்கையை ஓ.டி.டி. தளங்கள் காப்பாற்றும் என நடிகை வித்யா பாலன் தெரிவ