ஜனாதிபதி கோட்டாவிற்கு யாழ் நீதிமன்றம் விடுத்த அழைப்பாணை இரத்து!
In ஆசிரியர் தெரிவு November 24, 2020 5:52 am GMT 0 Comments 1930 by : Jeyachandran Vithushan

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு யாழ் நீதிமன்றம் விடுத்த அழைப்பாணையை மேன்முறையீட்டு நீதிமன்றம் இரத்து செய்துள்ளது.
லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் காணாமல் போனமை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் பாதுகாப்பு செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அழைப்பாணை விடுக்கப்பட்டது.
யுத்தத்தின் பின் மக்கள் போராட்டங்களை ஒழுங்கமைத்து வந்த செயற்பாட்டாளர்களான இவர்கள் இருவரும் யாழ்ப்பாணத்தில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டிருந்தனர்.
இது தொடர்பாக அவர்களின் உறவினர்களால் ஆள்கொணர்வு மனு 2012ஆம் ஆண்டு கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டது.
இதனை அடுத்து அந்த விசாரணைகள் யாழ். நீதவான் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட சாட்சிகளை விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனையடுத்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் 2012 ஆம் ஆண்டு செப்ரெம்பர் 19ஆம் திகதி விசாரணைகள் ஆரம்பமாகியிருந்த நிலையில் சாட்சியம் ஒன்றினை பெற்றுக்கொள்ள கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் ஹிந்தியில் ரீமேகாக உள்ளது. இது குறித்த விபரங்
-
இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்தவிற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடு
-
மட்டக்களப்பு – ஏறாவூர்பற்று செங்கலடி பிரதேச சபையின் தவிசாளராக சின்னத்துரை சர்வானந்தன் ஆறு மேலதிக வாக
-
உத்தரப்பிரதேசத்தில் கொரோனா தடுப்பூசி ஏற்றிக்கொண்ட மருத்துவமனை ஊழியர் உயிரிழந்ததாக தகவல் வெளியான நிலை
-
அடுத்த சில வாரங்களில் அண்டை நாடுகளுக்குக் கொரோனா தடுப்பு மருந்துகளை ஏற்றுமதி செய்ய இந்தியா திட்டமிட்
-
நாட்டில் உளுந்து இறக்குமதிக்குத் தடை விதிக்கப்பட்டதையடுத்து, சந்தையில் உளுந்தின் விலை இரண்டாயிரம் ரூ
-
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை,
-
கண்டி – தலதா மாளிகையின் ஊழியர்கள் எவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகவில்லை என அறிவிக்கப்பட்ட
-
மடு கல்வி வலயத்தில் 61 பேருக்கு ஆசிரியர் நியமனம் இன்று (திங்கட்கிழமை) வழங்கி வைக்கப்பட்டுள்ளது. மடு
-
உலகளவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 9 கோடியே 55 இலட்சத்து 3 ஆயிரத்து 22