ஜனாதிபதி வேட்பாளராக குமார வெல்கமவை களமிறக்கும் பொதுஜன பெரமுன?
In ஆசிரியர் தெரிவு April 16, 2019 5:38 am GMT 0 Comments 3015 by : Yuganthini

இலங்கையில் நடைபெறவுள்ள அடுத்த ஜனாதிபதி தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவை நிறுத்துவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாக கூறப்படுகின்றது.
இலங்கையிலுள்ள ஆங்கில ஊடகமொன்றே இவ்வாறு செய்தி வெளியிட்டுள்ளது. அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த முடியாத நிலைமை ஏற்படின், குமார வெல்கமவை வேட்பாளராக நிறுத்துவதற்கு பொதுஜன பெரமுனவில் ஆராயப்பட்டு வருகின்றது.
மேலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவாராயின் பொதுஜன பெரமுன, தனித்து போட்டியிட வேண்டுமென அதன் உறுப்பினர்களில் சிலர் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையிலேயே பொது வேட்பாளராக குமார வெல்கவை நிறுத்த வேண்டுமென பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களில் பெரும்பாலனோர் வலியுறுத்தியுள்ளனர்.
ஆகையால் கூட்டு எதிரணியினர், ஜனாதிபதியிடம் இவ்விடயம் குறித்து கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
கொரோனா வைரஸின் தாக்கம் அடுத்த 4 முதல் 5 ஆண்டுகள் வரை நீடிக்கலாம் என சிங்கப்பூரின் கல்வித்துறை அமைச்ச
-
வடக்கு மாகாணத்தில் மேலும் 18 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வட.மாகாண சுகாதார
-
இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. அந்தவகையில் நேற்று
-
பிரேசில் நாட்டில் பேருந்தொன்று மலைக்குன்றில் இருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் 19 பயணிகள் உ
-
நாடு திரும்புவதற்கு எதிர்பார்த்துள்ள வெளிநாட்டில் பணிபுரியும் பணியாளர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்
-
இலங்கையில் புதிய வகை கொரோனா வைரஸ் இனங்காணப்பட்டுள்ளதாக ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது
-
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று வந்த சசிகலா இன்று (புதன்கிழமை) விடுதலை செய்யப்படுகிறார். சொ
-
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் மிச்செலே பச்செலெட்டினால் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட
-
நாட்டின் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொவி
-
இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 755 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளத