ஜனாஸாக்கள் தகனம் செய்யப்படுவதற்கு எதிராக கிளிநொச்சியில் போராட்டம்!
முஸ்லிம்களின் ஜனாஸா தகனம் செய்யப்படுகின்றமைக்கு எதிராக கிளிநொச்சியில் எதிர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டம் கிளிநொச்சி பழைய மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை முன்னெடுக்கப்பட்டது.
அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த போராட்டத்தில், ஜனாசாக்களை எரிப்பதற்கு எதிராக கோசங்கள் எழுப்பப்பட்டுள்ளதோடு, பதாதைகளும் ஏந்தப்பட்டுள்ளன.
குறித்த போராட்டத்தில், பொது அமைப்புக்கள், அரசியல்வாதிகள் மற்றும் மதத்தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.