ஜம்மு காஷ்மீரில் துப்பாக்கி சண்டை: தீவிர பாதுகாப்பு
In இந்தியா May 3, 2019 6:20 am GMT 0 Comments 2179 by : Yuganthini

ஜம்மு காஷ்மீர் மாநிலம், சோபியான் பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையில் கடுமையான துப்பாக்கி சண்டை மிக நீண்டநேரம் இடம்பெற்றதாக இந்திய இராணுவம் குறிப்பிட்டுள்ளது.
இன்று (வெள்ளிக்கிழமை) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சண்டையின்போது, ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்த தகவல் வெளியாகவில்லை என்பதுடன் அப்பகுதியில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
சோபியான், இமாம் சாகிப் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் அப்பகுதியில் தேடுதல் நடவடிக்கையில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது அப்பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள், படையினரை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையில் கடுமையான துப்பாக்கிச் சண்டை இடம்பெற்றுள்ளது. இருப்பினும் உயிரிழப்புகள் அல்லது சேத விபரங்கள் குறித்து எந்ததொரு தகவலையும் இராணுவம் இன்னும் வெளியிடவில்லை.
இந்நிலையில் அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
நாட்டில் மேலும் 353 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்
-
தமிழர்களுக்கு பொதுசன வாக்கெடுப்பு தேவையென ஐ.நா., அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியாவிற்குச
-
சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த கல்வி அமைச்சர் பேராசியர் ஜீ.எல்.பீரிஸிற்கு கொரோனா வைரஸ்
-
ஏழை நாடுகளுக்கு இலாப நோக்கற்ற அடிப்படையில் 40 மில்லியன் வரை கொவிட்-19 தடுப்பூசி அளவுகளை வழங்குவதாக ஃ
-
அண்மைய நாட்களில் கொவிட்-19 தொற்றுகள் அதிகரித்ததைத் தொடர்ந்து டுபாய் அதிகாரிகள் அருந்தகங்கள் மற்றும்
-
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இரண்டாம்நாள் ஆட்டம் நிறைவு
-
பிக் பேஷ் ரி-20 தொடரின் 50ஆவது லீக் போட்டியில், பெர்த் ஸ்கொர்சர்ஸ் அணி 11 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்
-
இலங்கையில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 49 ஆயிரத்து 261 ஆக உயர்ந்துள்ளது.
-
திருகோணமலைக்கு சீமெந்து ஏற்றிக்கொண்டு சென்ற எம்.வி. யூரோசுன் (MV Eurosun) என்ற கப்பல் பாறை ஒன்றுடன்
-
கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவு ஜப்பானில் தற்கொலைகள் அதிகரித்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை அம