ஜெயலலிதாவின் 4 ஆம் ஆண்டு நினைவேந்தல்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி
In இந்தியா December 5, 2020 9:11 am GMT 0 Comments 1577 by : Yuganthini

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 4ஆம் ஆண்டு நினைவேந்தல் தமிழக மக்களினால் இன்று (சனிக்கிழமை) நினைவு கூரப்படுகின்றது.
ஆனால் இம்முறை கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வீடுகளிலேயே விளக்கேற்றி, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்துமாறு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஜெயலலிதாவின் 4ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினாவிலுள்ள நினைவிடத்தில் மலர்தூவி, அஞ்சலி செலுத்திய பின் அவர் இவ்வாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும், அ.தி.மு.க.நிர்வாகிகளும் தொண்டர்களும் தமது இல்லங்களில் விளக்கு ஏற்றி வைத்து, அவரது திருவுருவப் படத்தின் முன் அன்போடு வணங்க வேண்டும் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை ஜெயலலிதாவின் நினைவு தினத்தை முன்னிட்டு, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் உறுதி மொழி வாசிக்க, மெரினா நினைவிடத்திற்கு வருகை தந்திருந்த கட்சியினர் அதை திரும்ப கூறினர்.
இயற்கை பேரிடர் நேரங்களில் சுற்றிச் சுழன்று அல்லும் பகலும் அயராது பாடுபட்டவர் ஜெயலலிதா, அவர் காட்டிய வழியில் பல்வேறு இயற்கை பேரிடர் நேரங்களில் மக்களுக்காக தமிழக அரசு பணியாற்றுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.