ஜெயலலிதா மரண விசாரணை: அப்பல்லோ வைத்தியர்கள் 10 பேருக்கு அழைப்பாணை
In இந்தியா April 6, 2019 2:50 pm GMT 0 Comments 2596 by : Yuganthini

தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அப்பலோ வைத்தியர்கள் 10 பேரையும் விசாரணைக்கு முன்னிலையாகுமாறு ஆறுமுகசாமி ஆணையகம் அழைப்பாணை அனுப்பியுள்ளது.
இதன்படி எதிர்வரும் 10 மற்றும் 11ஆம் திகதிகளில் ஆணையகத்தில் முன்னிலையாகுமாறு குறித்த அழைப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிப்பதற்கு, மருத்துவக்குழு அமைத்தால் மாத்திரமே ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு வைத்தியர்கள் முன்னிலையாவார்களென அப்பல்லோ வைத்தியசாலையின் நிர்வாகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
குறித்த வழக்கின் மனு மீதான விசாரணை இன்று (சனிக்கிழமை) உயர் நீதிமன்றத்தில் இடம்பெற்றது. இதன்போது மனுவை விசாரித்த நீதிபதிகள், ஆறுமுகசாமி ஆணையம் அப்பல்லோ வைத்தியர்களை விசாரணைக்கு உட்படுத்துவதற்கு தடையில்லை என உத்தரவிட்டது.
அதனைத் தொடர்ந்தே ஆறுமுகசாமி ஆணையகம், அப்பலோ வைத்தியர்களுக்கு அழைப்பாணை அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
இந்தியாவின் 72 ஆவது குடியரசு தின கொண்டாட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகின்ற நிலையில், ஜனா
-
இலங்கை 5 இலட்சம் அஸ்ட்ராஜெனெகா கொவிட்-19 தடுப்பூசிகளை இந்தியாவிடம் இருந்து பெறுவதற்கு நடவடிக்கை மேற்
-
இலங்கைக்கான வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிப்பது குறித்தும் துறைமுகங்கள் விமான நிலையங்கள் எரிசக்தி – மீ
-
வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி டெல்லியை நோக்கி ட்ராக்டர் பேரணியை விவசாயிகள் ஆரம்பித்துள்ளனர். சிங
-
தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1000 ரூபாயாக அதிகாிக்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளதாக அரசாங்
-
நாட்டின் 72ஆவது குடியரசு நாள் விழாவை முன்னிட்டு டெல்லியிலுள்ள போர் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோ
-
டென்மார்க்கில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர்
-
72ஆவது இந்திய குடியரசு தினத்தினை முன்னிட்டு யாழிலுள்ள இந்திய துணை தூதரக அலுவலகத்தில் இன்று (செவ்வாய்
-
சூப்பர் ஸ்ரார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் அண்ணாத்த திரைப்படம் தீபாவளி தினத்தன்று வெளியாகும்
-
மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில், பங்களாதேஷ் அணி 120 ஓட்டங