டயானா கமகே, அரவிந்தகுமாருக்கு ஆளும் கட்சி பகுதியில் ஆசனங்கள்!
In இலங்கை November 16, 2020 9:43 am GMT 0 Comments 1382 by : Vithushagan

எதிடணி நாடாளுமன்ற உறுப்பினர்களான டயானா கமகே மற்றும் அருணாச்சலம் அரவிந்தகுமார் ஆகியோருக்கு பாராளுமன்றத்தில் ஆளும் கட்சி பகுதியில் ஆசனங்களை ஒதுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஆளும் கட்சியின் கோரிக்கைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
ஆளும் கட்சியின் பிரதம கொறடா ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சபாநாயகரிடம் இதற்கான கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
இதேவேளை, 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு ஆதரவளித்த எதிர்க்கட்சியின் ஏனைய ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிர்க்கட்சி பகுதியிலேயே தனியாக ஆசனங்களை ஒதுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ குறிப்பிட்டார்.
எனினும், தமது கட்சியின் நிலைப்பாட்டிற்கு மாறாக 20 ஆவது அரசியல் அமைப்பு திருத்தத்திற்கு ஆதரவளித்த ஐக்கிய மக்கள் சக்தியின் 09 பேருக்கும் ஆளும் தரப்பில் ஆசனங்களை ஒதுக்குமாறு எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல, சபாநாயகரிடம் கடிதம் ஒன்றினூடாக கோரிக்கை விடுத்திருந்தார்.
20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு கடந்த மாதம் 21 ஆம் திகதி நடத்தப்பட்டதுடன், திருத்த சட்டத்திற்கு ஆதரவாக ஐக்கிய மக்கள் சக்தியின் 09 உறுப்பினர்கள் வாக்களித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.