டுபாயில் பிரித்தானிய பெண்ணிற்கு சிறைதண்டனை!
In இங்கிலாந்து April 8, 2019 5:27 am GMT 0 Comments 2537 by : Benitlas

டுபாயில் பிரித்தானிய பெண் ஒருவரிற்கு சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
லண்டனை சேர்ந்த 55 வயதான லாலெ ஷ்ரவேஷ், தனது கணவரின் இறுதிச்சடங்கிற்காக டுபாய் சென்றுள்ளார். இதன்போது அவர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
2016ஆம் ஆண்டு தனது கணவர் மறுமணம் புரிந்த ஒளிப்படங்களை முகப்புத்தகத்தில் பதிவிட்ட போது, ஷ்ரவேஷ் பகிர்ந்த கருத்துக்கள் குறித்தே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஷ்ரவேஷிற்கும் அவரது கணவருக்கும் திருமணமாகி 18 வருடங்கள் ஆனது. இதன்போது ஒரு எட்டு மாத காலம் ஐக்கிய அரபு எமிரேட்டில் ஷ்ரவேஷ் இருந்துள்ளார்.
எனினும் விவாகரத்தானதும் பிரித்தானியாவிற்கு தனது மகளுடன் திரும்பியுள்ளார்.
இந்தநிலையில் தனது கணவர் மறுமணம் செய்துகொண்ட ஒளிப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்தவுடன் ஷ்ரவேஷ், ‘நீ மண்ணில் புதைந்து போக வேண்டும். இந்த குதிரைக்காகதான் என்னை விட்டுவிட்டாயா’ என பதிவிட்டுள்ளார்.
டுபாயின் சைபர் குற்றவியல் சட்டப்படி சமூக வலைதளங்களில் மரியாதைக் குறைவான கருத்துக்களை பதிவிட்டால் சிறை தண்டனையோ அல்லது அபராதமோ விதிக்கப்படும் என்பது குறிப்பிடப்படுகின்றது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு முன்பாக நின்று தோட்டத்தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் பெற்றுத்
-
கடந்த கால பேச்சுவார்த்தைகளில் நடந்ததை ஒதுக்கி வைத்துவிட்டு மத்திய அரசு விவசாயிகளுடன் புதிதாக பேச்சுவ
-
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் முன்னாள் தலைவர் சி.மூ. இராசமாணிக்கத்தின் 108 ஆவது ஜனனதினம் நேற்று(புதன்க
-
ஜேர்மனியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 50ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழ
-
மன்னார் மாவட்டத்தில் 18 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்று(புதன்கிழமை) உறுதிப்படுத்தப்பட்டுள
-
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ஜோ பைடன் மற்றும் உப ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள கமலா ஹா
-
தமிழில் ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’, ‘பம்மல் கே. சம்பந்தம்’, உள்ளிட்ட படங்
-
நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களில் குற
-
திருவனந்தபுரம் விமான நிலையத்தை பராமரிக்கும் பொறுப்பை ‘அதானி’ குழுமத்துக்கு ஒப்படைக்கும்
-
இலங்கையில் சுமார் 10 மாதங்களுக்குப் பின்னர் விமான நிலையங்கள் இன்று (வியாழக்கிழமை) திறக்கப்பட்டுள்ள ந