டுவிட்டர் தளத்தில் புதிய அதிரடி மாற்றம்
In அறிவியல் April 10, 2019 5:24 pm GMT 0 Comments 4728 by : adminsrilanka

டுவிட்டர் தளம் பல்வேறு மாற்றங்களை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்ற நிலையில், ஒருவர் நாள் ஒன்றுக்கு எத்தனை பேரை பின்தொடர வேண்டும் என்ற எண்ணிக்கையில் மாற்றம் செய்திருக்கின்றது.
ஸ்பேம் மற்றும் ரோபோட் பயன்பாடுகளை தடுக்கும் நோக்கில், டுவிட்டர் தளத்தில் பயனர் நாள் ஒன்றுக்கு அதிகபட்சம் 400 பேரை மட்டுமே பின்தொடர முடியும்.
இதற்கு முதல் நாள் ஒன்றுக்கு பயனர் 1000 பேரை பின்தொடரும் வசதி வழங்கப்பட்டிருந்தது. புதிய மாற்றத்தின் மூலம் உத்தியோகபூர்வம் இல்லாத பயனர்கள் தினமும் 400 கணக்குகளை பின்தொடரலாம்.
உத்தியோகபூர்வ கணக்கு வைத்திருப்போர் தினமும் 1000 பேரை பின்தொடரலாம். இதுதவிர பயனர் அதிகபட்சம் 5000 பேரை மட்டுமே பின்தொடர முடியும். 5000 பேரை பின்தொடர்ந்த பின் பயனர் குறிப்பிட்ட அளவு பின்தொடர்வோர் எண்ணிக்கையை கடக்கும் வரை காத்திருக்க வேண்டும்.
இந்த எண்ணிக்கை ஒவ்வொரு கணக்குகளுக்கும் வேறுபடும். இது ஒவ்வொருத்தர் பின்தொடரும் கணக்குகளுக்கு ஏற்ப வித்தியாசமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பின்தொடர்வதற்கான எண்ணிக்கையை கடந்ததும் பயனருக்கு தகவல் கிடைக்கும்.
இந்த தகவல் பயனர் குறிப்பிட்ட நாளில் பின்தொடரும் அளவை கடந்ததும் திரையில் தோன்றும். இதே தகவல் பயனரின் மொத்த பின்தொடர்வோர் எண்ணிக்கையை கடக்கும் போதும் வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.