டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

கடந்த 10 வருடங்களின் பின்னர் கடந்த வருடம் டெங்கு நோய் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது.
டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் அருண ஜயசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் 30 ஆயிரத்து 691 பேர் டெங்கு நோயாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.
கடந்த வருடத்தில் டெங்கு நோய் தொற்றுக்குள்ளான 35 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “2020 ஆம் ஆண்டில், டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கையிலும், இறப்புகளின் எண்ணிக்கையிலும் கணிசமான வீழ்ச்சியை காணக்கூடியதாக உள்ளது.
கடந்த வருடத்தில் பெப்ரவரி மாதத்தை தவிர்ந்த ஏனைய மாதங்களுடன் ஒப்பிடும் போது கடந்த 10 வருடங்களில் பதிவான தொற்றாளர்களை விட குறைவான தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.“ எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.