டென்னிஸ் வீரர்களின் தரவரிசைப்பட்டியல் வெளியீடு!
டென்னிஸ் வீரர்களின் தரவரிசைப்பட்டியலை, சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் வெளியிட்டுள்ளது.
சிறப்பாக விளையாடும் வீரர்களின் தரநிலையை ஒவ்வொரு தொடரின் பின்னரும் மதிப்பிட்டு, சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் வெளியிடுவது வழக்கம்.
அவ்வாறு தற்போது மாற்றம் கலந்த டென்னிஸ் வீரர்களின் தரவரிசைப்பட்டியலை, சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் வெளியிட்டுள்ளது.
இதில் முதல் பத்து இடங்களில் உள்ள வீரர்களின் விபரத்தை பார்க்கலாம்,
இந்த பட்டியலில், ஆண்கள் ஒற்றையர் தரவரிசையில் 31 வயதான செர்பியா வீரர் நோவக் ஜோகோவிச் 11,160 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார்.
அவர் இந்த வாரத்தையும் சேர்த்து மொத்தம் 250 வாரங்கள் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார். இதன் மூலம் முதலிடத்தை 250 வாரங்கள் ஆக்கிரமித்த 5ஆவது வீரர் என்ற பெருமையை ஜோகோவிச் பெற்றுள்ளார்.
ஸ்பெயினின் முன்னணி வீரரான ரபேல் நடால், 7765 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில், உள்ளார்.
ஒரு இடம் முன்னேறி சுவிஸ்லாந்தின் முன்னணி வீரரான ரொஜர் பெடரர், 5590 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.
ஒரு இடம் பின்தள்ளப்பட்டு ஜேர்மனியின் இளம் வீரர் அலெக்ஸான்டர் ஸ்வெரவ், 5565 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளார்.
ஒஸ்திரியாவின் டோமினின் தியேம், 5085 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திலும், தென்னாபிரிக்காவின் கெவீன் ஆண்டசன் 4115 புள்ளிகளுடன் ஆறாவது இடத்திலும் உள்ளனர்.
இதனையடுத்து, ஜப்பானின் கெய் நிஷிகோரி 3780 புள்ளிகளுடன் ஏழாவது இடத்திலும், ஆர்ஜெண்டீனாவின் ஜூவான் மார்டின் டெல் பெட்ரோ 3225 புள்ளிகளுடன் எட்டாவது இடத்திலும் உள்ளனர்.
கிரேக்கத்தின் ஸ்டெபீனோஸ் ஸிட்ஸிபாஸ் ஒரு இடம் முன்னேறி 3190 புள்ளிகளுடன் ஒன்பதாவது இடத்தில் உள்ளார்.
அமெரிக்காவின் ஜோன் இஸ்னர், ஒரு இடம் பின்தள்ளப்பட்டு 3085 புள்ளிகளுடன் பத்தாவது இடத்தில் உள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.