தடுப்பூசி கிடைப்பதில் தாமதம் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று – இத்தாலிய பிரதமர்
In இத்தாலி January 24, 2021 8:45 am GMT 0 Comments 1500 by : Jeyachandran Vithushan

பைசர் மற்றும் அஸ்ட்ராஜெனெகாவிலிருந்து கொரோனா தடுப்பூசிகள் வழங்குவதில் தாமதம் ஏற்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என இத்தாலிய பிரதமர் கியூசெப் கோன்டே தெரிவித்துள்ளார்.
உற்பத்தி சிக்கல்கள் காரணமாக ஒப்புக்கொண்டபடி ஐரோப்பிய ஒன்றியத்திற்கு தடுப்பூசிகளை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக இரு நிறுவனங்களும் அறிவித்திருந்த.
இந்நிலையில் இந்த நடவடிக்கையானது கடுமையான ஒப்பந்த மீறல்கள் என இத்தாலிய பிரதமர் கியூசெப் கோன்டே குற்றம் சாட்டியுள்ளார்.
விநியோக சிக்கல்கள் தொடர்ந்தால், நாடு தனது தடுப்பூசி திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டி ஏற்படும் என்றும் எச்சரித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.