தடுப்பூசி செலுத்துவதில் முதியோர்களுக்கு முன்னுரிமை
In இந்தியா January 30, 2021 10:31 am GMT 0 Comments 1507 by : Jeyachandran Vithushan

தமிழகத்தில் முன் களப்பணியாளர்களுக்கு பெப்ரவரி ஒன்றாம் திகதி முதல் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருவதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில், வெண்டிலேட்டர் வசதியுடன் அமைக்கப்பட்ட 25 படுக்கைகள் கொண்ட புதிய வார்டை பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் முதியோர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்திருப்பதாக தெரிவித்தார்.
தமிழகம் முழுவதும் நாளை 43 ஆயிரத்து 51 மையங்களில் போலியோ சொட்டுமருந்து முகாம் நடத்தப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.