தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களால் வைரஸ் பரவக்கூடும் – அதிகாரிகள் எச்சரிக்கை
In இங்கிலாந்து January 24, 2021 8:23 am GMT 0 Comments 2117 by : Jeyachandran Vithushan

கொரோனா தடுப்பூசிகளை பெற்றவர்களால் கொரோனா தொற்று பரவக் கூடும் என இங்கிலாந்தின் பிரதி தலைமை மருத்துவ அதிகாரி எச்சரித்துள்ளார்.
தடுப்பூசிகள் நம்பிக்கை தருகின்றன, ஆனால் தொற்று விகிதங்கள் விரைவாகக் குறைய வேண்டும் என பிரதி தலைமை மருத்துவ அதிகாரி ஜொனதன் வான்-டாம் தெரிவித்துள்ளார்.
நாட்டில் இதுவரை 32 கொரோனா தடுப்பூசிகளை செலுத்துவதற்கான நிலையங்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தும் பணிகள் இடம்பெற்று வருக்கின்றன.
இந்நிலையில் எந்தவொரு தடுப்பூசியும் இதுவரை 100% பயனுள்ளதாக இல்லை என்றும் எனவே எந்தவிதமான உத்தரவாதமும் கிடையாது எனவும் பிரதி தலைமை மருத்துவ அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.