தந்தை செல்வாவின் நினைவு தினத்தில் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி
In இலங்கை April 26, 2019 5:48 am GMT 0 Comments 2148 by : Yuganthini
தந்தை செல்வாவின் நினைவு தினமும், தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களில் நடத்தப்பட்ட தீவிரவாத தற்கொலைத்தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்குமான நினைவேந்தலும் இன்று (வெள்ளிக்கிழமை) யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் பிரதான வீதியிலுள்ள தந்தை செல்வா சதுக்கத்தில் குறித்த நிகழ்வு இன்று (வெள்ளிக்கிழமை) நடத்தப்பட்டது.
இதன்போது நிகழ்வில் கலந்துகொண்டோர், தந்தை செல்வாவின் சதுக்கத்திலுள்ள சமாதிக்கு மேல், மலர்களை தூவி அஞ்சலி செலுத்தியதுடன் தீவிரவாத தற்கொலை தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்காக தீபங்களை ஏற்றி, பிராத்தனையில் ஈடுபட்டனர்.
குறித்த நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈஸ்வரபாதம் சரவணபவன், யாழ்.மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
உலக நாடுகள் அனைத்திலும் கொரோனாவினால் மரணிப்பவர்களை அடக்கம் செய்யும் போது நாங்கள் மாத்திரம் அதனை ஆய்
-
ஒருமுறை மாத்திரம் பயன்படுத்தப்படும் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் உற்பத்தியிலான பொருட்களை தடை செய்யு
-
இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. அந்தவகையில் நேற்
-
கிளிநொச்சி கந்தன்குளத்தை பாதுகாக்க முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை மீண்டும் இன்று (வெள்ளிக்கிழமை) காலை ஆ
-
இந்தியாவில் இதுவரை 145 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றின் புதிய பிறழ்வு கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமை
-
மட்டக்களப்பில் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் பொலிஸார் உட்பட 11 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட
-
பொதுபோக்குவரத்து மற்றும் பாடசாலை மாணவர்களை ஏற்றிச்செல்லும் வாகனங்களில் உரிய சுகாதார வழிமுறைகள் பின்ப
-
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலாவிற்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பெங
-
யாழ். நகரப் பகுதியில் இலுப்பையடிச் சந்திக்கு அருகில் நேற்றிரவு(வியாழக்கிழமை) இடம்பெற்ற விபத்தில் மூவ
-
கட்டுநாயக்க − வலனாகொட பகுதியில் கொரோனா தொற்றாளர் ஒருவர் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.