தனிமைப்படுத்தல் நடவடிக்கையில் இருந்த பல பகுதிகள் விடுவிப்பு
In இலங்கை January 16, 2021 2:27 am GMT 0 Comments 1410 by : Yuganthini

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக அமுல்படுத்தப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் சட்டம், பல பகுதிகளில் தளர்த்தப்பட்டுள்ளதாக கொரோனா தடுப்பு செயலணி அறிவித்துள்ளது.
இதற்கமைய எஹெலியகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மின்னான, போபத்தெல்ல, வெலேகொட, அஸ்கஹுல மற்றும் யகுதாகொட ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தல் நடவடிக்கையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.
அதேபோன்று பாணந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 675 தொடவத்த கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளும் தனிமைப்படுத்தில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இதேவேளை, பேருவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மங்கொன கிழக்கு மற்றும் மங்கொன மேற்கு கிராம சேவகர் பிரிவுகளும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.
குறித்த பகுதிகளில் அமுலில் இருந்த தனிமைப்படுத்தல் சட்டம் இன்று (சனிக்கிழமை) காலை 5 மணி முதல் தளர்த்தப்பட்டுள்ளதாக கொரோனா தடுப்பு செயலணி குறிப்பிட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.